/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொது பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
/
பொது பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
பொது பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
பொது பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ADDED : செப் 13, 2024 06:48 AM
குளித்தலை: கட்டளை மேட்டுவாய்க்கால் கடைமடை பகுதியில் உள்ள, விவசாய நிலத்திற்கு தண்ணீர் வழங்காததால், பாலம் கட்டும் பணிக்காக போடப்பட்ட குழாய்களை அகற்றி, தண்ணீர் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
குளித்தலை அடுத்த, மாயனுார் காவேரி ஆறு கதவணையில் இருந்து, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை பாசன வாய்க்கால், கிருஷ்ணாயபுரம் பாசன வாய்க்கால் என நான்கு பாசன வாய்க்கால் மூலம், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர். கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு, கடைமடை பகுதிகளான நங்கவரம், சூரியனுார், கவுண்டம்பட்டி, சேப்பளாபட்டி, முதலைப்பட்டி, நெய்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் செய்வதற்கு இதுவரை தண்ணீர் செல்லாததால், கடைமடை பகுதி விவசாயிகள் தண்ணீர் திறக்க கோரி பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
மேலும், ராஜேந்திரம் பஞ்., கருங்களாப்பள்ளி கட்டளை மேட்டு வாய்க்காலில், பாலம் கட்டும் பணிக்காக குழாய்கள் மூலம் பாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருப்பதால், இந்த குழாயால் பாசனத்திற்கு தண்ணீர் குறைந்த அளவே வெளியேறுவதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வ தடையாக இருந்து வருகிறது. எனவே, பாலம் பணியில் உள்ள குழாய்கள் அகற்றி, கடைமடை பகுதி வரை உடனே தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, குளித்தலை பெரியபாலம் பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்டம் அலுவலகத்தை, நேற்று காலை 10:00 மணியளவில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோபிகிருஷ்ணன், உதவி பொறியாளர் பத்மபிரியா, தாசில்தார் மகாமுனி, இன்ஸ்பெக்டர் உதயகுமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயராமன், ஆர்.ஐ., ஸ்ரீவித்யா, நெடுஞ்சாலை ஆய்வாளர் சேகர் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள், 'கடைமடை பகுதிக்கு வாய்க்காலில் தண்ணீர் வர வேண்டுமென்றால் பாலம் கட்டுமான பணிக்கு போடப்பட்டுள்ள குழாய்களை அகற்ற வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கருங்காளப்பகுதி மக்கள் பாதிக்காத வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை. தற்காலிகமாக பாசன வாய்க்காலில் இரும்பு பாலம் அமைக்கப்படும். தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.