/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுார் ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம் விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை
/
மருதுார் ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம் விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை
மருதுார் ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம் விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை
மருதுார் ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம் விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : மார் 29, 2024 01:00 AM
குளித்தலை:குளித்தலை
அருகே, மருதுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் திட்டத்தை
விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு
தலைவர் ஜெயராமன், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டசபை தொகுதி, திருச்சி மாவட்டம்,
முசிறி, மணச்சநல்லுார், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில், இப்போது நிலத்தடி நீர்மட்டம், 500 முதல், 1,000 அடி ஆழம்
வரை உள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் கூட கிணற்று பாசனம் வைத்து விவசாயம்
செய்ய முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக, கிராமப்புறங்களில்
கோடை காலங்களில் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காமல்
விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு நிலத்தடி
நீர்மட்டம், ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில்,
மருதுார் - உமையாள்புரம் காவிரி ஆற்றின் குறுக்கே, கடந்த, அ.தி.மு.க.,
ஆட்சியில் கதவணை அமைக்கும் திட்டத்திற்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில்
சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மருதுார்
காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்காக, 750 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஆதாரம் காரணமாக அந்த திட்டம் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.
எனவே, நபார்டு வங்கி திட்டம் மூலம் நிதி
ஆதாரங்களை பெற்று, குளித்தலை அருகே, மருதுார் - உமையாள்புரம்
காவிரியில் கதவணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

