/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்கால் கரையில் வழித்தடம் ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை
/
வாய்க்கால் கரையில் வழித்தடம் ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை
வாய்க்கால் கரையில் வழித்தடம் ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை
வாய்க்கால் கரையில் வழித்தடம் ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை
ADDED : பிப் 11, 2025 07:24 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால் கரையில், வழித்தடம் ஏற்-படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து, கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால் கரை செல்கிறது. பாசன வாய்க்கால் அருகில், 200 ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளன. இதில் வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது பாசன வாய்க்கால் கரைகள் வலுவிழந்து குறுகிய நிலையில் இருப்பதால்,
கிருஷ்ணராயபுரம் மஞ்சமேடு பகுதியில் இருந்து மலையப்ப காலனி வரை விவசாய நிலங்களுக்கு
செல்-வதில் சிரமம் ஏற்படுகிறது. விளை நிலங்களுக்கு செல்ல முடி-யாமல், அருகில் உள்ள விவசாய
விளை நிலங்கள் வழியாக செல்ல வேண்டியுள்ளது.இதனால் சில நேரங்களில் அறுவடை பணி பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் விளை நிலங்களுக்கு
எளிதாக செல்லும் வகையில், நீர்வளத்துறை நிர்வாகம் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால்
கரையை விரிவுப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.