/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 28, 2025 08:04 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், நிலத்தடி நீர் மிகவும் குறைந்த பகுதியாக, கடவூர் பஞ்., யூனியன் உள்-ளது. அதில், 15க்கும் மேற்பட்ட கிராம பஞ்.,களில், விவசாய தொழிலே பிரதானமாக உள்ளது. போதிய மழை மற்றும் நிலத்தடி நீர் இருப்பு இல்-லாததால், கடந்த, 1999ல் கொடுமுடி வாய்க்கால் திட்டம் உருவாக்கப்பட்டது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளை-யத்தில் காவிரியாற்றின் குறுக்கே உள்ள தடுப்ப-ணையை உயர்த்தி, தாதம்பாளையம், செட்டிபா-ளையம், அரவக்குறிச்சி, குஜிலியம்பாறை வடக்கு, கடவூர், வையம்பட்டி, மாமுண்டி ஆறு, விராலிமலை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், குண்டாறு வரை வாய்க்கால் அமைப்-பதாகும். காவிரியாற்றில் அதிகப்படியான வெள்ள நீர் ஓடும்போது, கொடுமுடி வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது. ஆனால், 25 ஆண்டுகளாக கொடுமுடி வாய்க்கால் திட்டம் கிடப்பில் உள்ளது.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கொடுமுடி வாய்க்கால் திட்டம் நிறைவேற்றப்-பட்டிருந்தால், தற்போது காவிரியாற்றில் ஓடும், உபரி நீர் மூலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால், 25 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் உள்-ளது. கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறை-வேற்றக்கோரி, மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் உண்ணாவிரதம் இருந்தார். இதை-யடுத்து கடந்த, 2011 ஆக., மாதம், தமிழகத்தில் உள்ள நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, 3,784 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், அந்த அறிவிப்பு என்ன ஆனது என தெரியவில்லை. கொடுமுடி வாய்க்கால் திட்டத்-துக்கு, 950 கோடி ரூபாய் மட்டும் செலவாகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஐந்து மாவட்டங்களில், பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும்.இவ்வாறு கூறினர்.