/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கி.புரத்தில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
கி.புரத்தில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 22, 2025 01:32 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரத்தில் தொடர் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளான வயலுார், சிவாயம், பாப்பகாப்பட்டி, பஞ்சப்பட்டி, சேங்கல், லாலாப்பேட்டை, மாயனுார், மணவாசி, வீரராக்கியம், கட்
டளை, ரெங்கநாதபுரம், பாலராஜபுரம், வரகூர், சரவணபுரம், அய்யர்மலை, வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி, வல்லம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில், நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். தொடர்ந்து பெய்யும் மழையால், வாழை, வெற்றிலை, நெல், மானாவாரி பயிர்களான எள், சோளம், துவரை, உளுந்து ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.