ADDED : அக் 22, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம், நொய்யல் மறவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்,61; கூலி தொழிலாளி. இவர்,
நேற்று முன்தினம் மாலை, வேலாயுதம்பாளையம் அருகே மறவாப்பாளையத்தில், கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்கு ரயில் கணேசன் மீது மோதியது. அதில், கணேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி கரூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.