/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆற்றில் அலசப்படும் பிளாஸ்டிக் பை தடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
ஆற்றில் அலசப்படும் பிளாஸ்டிக் பை தடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஆற்றில் அலசப்படும் பிளாஸ்டிக் பை தடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஆற்றில் அலசப்படும் பிளாஸ்டிக் பை தடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 28, 2024 02:05 AM
கரூர்: அமராவதி ஆற்றில், சிமென்ட் பிளாஸ்டிக் பைகள் அலசுவதை தடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்துக்கு விவசாய பணிகள் மற்றும் குடி-நீருக்காக தண்ணீர் திறக்கப்
படுகிறது.
அமராவதி அணையில் இருந்து செல்லும், 17 கிளை வாய்க்-கால்கள் மூலம், ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது.
மேலும், அரவக்குறிச்சி, க.பரமத்தி மற்றும் தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள, 70க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது.
தற்போது, கரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி நிறைவு பெற்-றுள்ள நிலையில், அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்-கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிக-ளையொட்டி, கரூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து, பிளாஸ்டிக் குப்பை, ஆண்டாங்கோவில், செல்லாண்டிபாளையம் கிராமப்பகு-திகளில் இருந்து சாயக்கழிவுகள் ஆற்றில் கலக்கிறது. மேலும், பழைய சிமென்ட் பிளாஸ்டிக் பைகளை, அமராவதி ஆற்றில் அலசும் வேலை நடந்து வருகிறது.
இதனால், அமராவதி ஆற்றில் அதிகளவு கழிவுகளாக காணப்படு-கிறது. குறிப்பாக சாயக்கழிவு, பிளாஸ்டிக் குப்பை, திருமுக்கூ-டலுார் பகுதியில், காவிரியாற்றில் கலந்து மாயனுார் கதவ-ணைக்கும் செல்கிறது. இதனால், விவசாய நிலங்களுக்கு, பாதிப்பு ஏற்படுவதுடன், குடிநீரும் மாசுபடுகிறது.
எனவே, அமராவதி ஆற்றில் சிமென்ட் பிளாஸ்டிக் பைகள்
அலசுவதை தடுக்க, கரூர் மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும்
அமராவதி வடிநில கோட்ட அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

