/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெறிநாய்களுக்கு பலியாகும் ஆடுகள் க.பரமத்தி பகுதி விவசாயிகள் அதிர்ச்சி
/
வெறிநாய்களுக்கு பலியாகும் ஆடுகள் க.பரமத்தி பகுதி விவசாயிகள் அதிர்ச்சி
வெறிநாய்களுக்கு பலியாகும் ஆடுகள் க.பரமத்தி பகுதி விவசாயிகள் அதிர்ச்சி
வெறிநாய்களுக்கு பலியாகும் ஆடுகள் க.பரமத்தி பகுதி விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : நவ 12, 2025 01:43 AM
கரூர், க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, மூன்று மாதமாக வெறிநாய்களுக்கு, ஆடுகள் இறையாகி வருகின்றன. இதனால், ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள, விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள கிராமங்களில், ஆடு வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. கடந்தாண்டு போதிய மழை இல்லாமல், தீவனங்களை விலைக்கு வாங்கி விவசாயிகள், ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த, மூன்று மாத காலத்தில், க.பரமத்தி, முன்னுார், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறிநாய்கள் கடித்ததால் இறந்துள்ளன. விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆடுவளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: க.பரமத்தி, தென்னிலை பகுதிகளில் போதிய மழை இல்லாததால், மானாவரி நிலங்களில் கூட விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால், செம்மறி ஆடுகளை பட்டியில் வைத்து வளர்த்து வருகிறோம். ஆனால், தெருக்களில் சுற்றிதிரியும், வெறிநாய்கள், பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்று விடுகின்றன. இறந்து போன ஆடுகளை இறைச்சிக்காக பயன்படுத்த முடியாது.
இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெறிநாய்களை கட்டுப்
படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

