/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த விருதுக்கு தேர்வு
/
கரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த விருதுக்கு தேர்வு
ADDED : நவ 12, 2025 01:42 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், மூன்று அரசு பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், சிறந்த கற்றல், கற்பித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பள்ளிகளுக்கு, விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி பஞ்., யூனியனில் எம்.தொட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளி, தோகைமலை பஞ்., யூனியனில் கள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரவக்குறிச்சி பஞ்., யூனியனில் சோழதாசன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய, மூன்று பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் வரும், 14ல் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழங்க உள்ளார்.

