ADDED : நவ 12, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல், நாளை நடக்கிறது என, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கு, www.tnrd.gov.in என்ற இணையதளம் மூலம் நேர்காணல் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணை வரப்பெற்றவர்கள், நாளை காலை, 10:00 மணிக்கு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நடக்கும்
நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

