/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
10 பவுன் தங்க சங்கிலி பறித்த 7 பேருக்கு 'காப்பு'
/
10 பவுன் தங்க சங்கிலி பறித்த 7 பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 12, 2025 01:42 AM
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, தங்க செயினை பறித்துச்சென்ற, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி, 67; இவர் கடந்த, 8ல் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே முனிநாதபுரம் பகுதியில், மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் கருணாநிதியை பின் தொடர்ந்து சென்ற, ஏழு பேர் அவர் அணிந்திருந்த, 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, கருணாநிதி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை வேலாயுதம்பாளையம் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், சென்னையை சேர்ந்த பூமிநாதன், 46, கரூரை சேர்ந்த சிவக்குமார், 25, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுரை சேர்ந்த சிலம்பரசன், 38, கார்த்திகேயன், 42, வடிவேல், 41, சத்தியராஜ், 31, சக்திவேல், 53, ஆகிய ஏழு பேர், கருணாநிதியை மிரட்டி, தங்க சங்கிலியை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, ஏழு பேரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தங்க சங்கிலி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

