/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராஜவாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி
/
ராஜவாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி
ADDED : நவ 12, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வாங்கல் அருகே, ராஜ வாய்க்கால் தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வாங்கல் அரங்கநாதன் பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சுதாகர், 55; இவர் கடந்த அக்., 21ல் அரங்கநாதன் பேட்டை வழியாக செல்லும், ராஜவாய்க்கால் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென தவறி விழுந்த சுதாகருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதாகர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, சுதாகரின் மனைவி அமுதா, 43, கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

