/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றுப்பகுதியில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள்
/
அமராவதி ஆற்றுப்பகுதியில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள்
அமராவதி ஆற்றுப்பகுதியில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள்
அமராவதி ஆற்றுப்பகுதியில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள்
ADDED : அக் 15, 2024 07:20 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பகுதிகளில் நெல் சாகுபடிக்காக, விவசாயிகள் நிலத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து ஆற்றில், சம்பா சாகுபடி பணிக்காக கடந்த, மாதம் முதல், முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பகுதிகளில், சோளம் அறுவடை நிறைவு பெற்றுள்ளது. இதனால், நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, நெல் நாற்று நடும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. முன்னதாக, விவசாயிகள் தழை சத்துக்காக நிலத்தில், கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், அவுரி செடியை பயிரிட்டனர். அதை நிலத்தில் டிராக்டர்கள் மூலம், சமன் படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பாசன பகுதிகளான கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டார பகுதிகளில் சோளம் அறுவடை முடிந்துள்ளது. அமராவதி அணையின் நீர் மட்டம், திருப்திகரமாக நடப்பாண்டு நெல் சாகுபடிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சோளம் அறுவடை முடிந்த நிலையில், நெல் சாகுபடிக்காக அமராவதி ஆற்று பகுதிகளில் ஆந்திரா பொன்னி, ஐ.ஆர். 20 நெல் ரகங்களை நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.