/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளாளப்பட்டியில் சேதமடைந்த நெற்களம் உலர வைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

ADDED : ஜூலை 31, 2025 01:49 AM
கரூர், வெள்ளாளப்பட்டியில், நெற்களம் சேதமடைந்து விட்டதால், தானியங்களை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, 14வது வார்டில் வெள்ளாளப்பட்டியில் நெற்களம் உள்ளது. இப்பகுதியில் கிணற்று மற்றும் நீரேற்று பாசன திட்டம் மூலம் நெல் மற்றும் கம்பு, சோளம் போன்ற தானியங்கள் சாகுபடி நடந்து வருகிறது. இங்கு அறுவடை நடந்த பின், நெல், தானியங்களை வெள்ளாளப்பட்டி களத்தில் உலர வைத்து வந்தனர். அது சேதமடைந்து கிடக்கிறது. நெற்களம் முழுதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து, பள்ளமாக காணப்படுகிறது. மழை பெய்யும் போது பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நெற்களம் சேதமடைந்துள்ளது விவசாயிகளை அதிருப்தியடைய செய்துள்ளது. நெல், தானியங்கள் பயிரிடும் போது வேறு வழியின்றி விவசாயிகள், ரோடுகளில் கதிர்களை போட்டு தானியங்களை பிரிக்க முடியாது தவிக்கின்றனர். நெற்களத்தை பயன்படுத்தியே தானியங்களை தனியாக பிரித்தெடுக்க முடியும். ஆனால், நெற்களம் முழுமையாக சேதமடைந்து மண் களமாக காட்சியளிக்கிறது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.