/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : மே 05, 2025 02:12 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த மாதங்-களில் பெய்த மழை காரணமாக, ஏற்கனவே பயிரிட்டு இருந்த மக்காச்சோளம் தற்போது நன்கு செழித்து வளர்ந்துள்ளது.
மக்காச்சோளம் பயிரை சாகுபடி செய்தால், ஐந்து மாதத்தில் மகசூல் தரும். ஒரு ஏக்கர் பயிரிட்டால் 15 மூட்டை மக்காச்-சோளம் மகசூல் கிடைக்கும். 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 1,000 முதல் 1,500 ரூபாய் வரை விலை போவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மக்காச்சோளம் விதைகளை வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கிச் செல்வதாக கூறுகின்றனர். விவசாயிகள் விரும்பினால், வெளிச்சந்தையில் தாங்களாகவே கொண்டு சென்று விற்றுக் கொள்ளலாம்.
தற்போது மக்காச்சோளம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் நல்ல விலை கிடைப்பதாக அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகு-தியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.