sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

/

மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஏப் 27, 2025 04:21 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மத்திய அரசின் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் விண்ணப்பிக்-கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்-தப்பட்டு வருகிறது. இதில், காய்கறி மற்றும் அனைத்து தோட்டக்-கலை பயிர்களுக்கும் சிறு விவசாயிகள், 5 ஏக்கர் வரை, குறு விவ-சாயிகள், 2.50 ஏக்கர் வரை, 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகளை தங்கள் நிலங்களில் அமைத்துக்கொள்-ளலாம். இதர விவசாயிகள், 75 சதவீத மானியத்தில், 12.5 ஏக்கர் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம். சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து, 7 ஆண்டு நிறைவுற்று இருந்தால் புதிதாக மீண்டும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம். சேதம் அடைந்-துள்ள உபகரணங்கள் (பக்கவாட்டு குழாய்) மட்டும் மானியத்தில் பெற்று சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம். தெளிப்பு நீர் பாசனம் அமைத்து மூன்று ஆண்டு நிறைவு பெற்றிருந்தால், சொட்டு நீர் பாசனமாக மாற்றி கொள்ளலாம்.

கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்-பாண்டில், 1,500 ஹெக்டேர் பரப்பில் 10.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், அடங்கல், கூட்டு வரை-படம், கணினி சிட்டா, மறு ஆய்வு தீர்வு பதிவேடு, நிலவரை-படம், சிறு, குறு விவசாயிகளாக வருவாய்துறை சான்று ஆகியவற்-றுடன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி அல்லது https://tnhorticulture.tn.gov.in என்ற இணையத-ளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us