/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : ஆக 25, 2025 03:02 AM
கரூர்: தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில், விவசாயிகள் பதிவு செய்து-கொள்ள வேண்டும் என, கரூர் மாவட்ட, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பல நன்மைகள் கொண்ட உயிர்ம வேளாண்மையை செய்ய விரும்பும் விவசாயிகள் கட்டணம் இல்லாமல், மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் மூலம், உற்பத்தி செய்-யப்படும் உயிர்ம பொருட்களுக்கு, அவர்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
மேலும், இந்த உயிர்ம வேளாண்மையின் கீழ், பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் விண்ணப்பபடிவம், பண்ணையின் பொது விபரங்கள், பண்ணை வரைபடம், மண் மற்றும் நீர் பரி-சோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், துறை உடனான ஒப்-பந்த படிவம், பட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நிரந்தர கணக்கு அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்-படம் மூன்று நகல்கள், தடையில்லா வில்லங்க சான்று ஆகிய விபரங்களுடன், கரூர் மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்