/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ADDED : மே 02, 2025 12:51 AM
கரூர்
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், தென்னிலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாலுக்குட்டி தலைமை வகித்தார். தேங்காய் மற்றும் கொப்பரைக்கு நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும். வெளி நாடுகளில் இருந்து இறங்குமதி செய்யும் பாமாயிலை தடை செய்து விட்டு, உள் நாட்டில் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்களுக்கு வழங்க வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகளிடம் அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாநில அவைத்தலைவர் பாலசுப்பிரமணி, மாநில தலைவர் சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.