/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்காலை துார் வார விவசாயிகள் கோரிக்கை
/
வாய்க்காலை துார் வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 03, 2025 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கருர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதி வழியாக லிங்கத்துார் பகுதியை ஒட்டி வீரராக்கியம் ஏரிக்கான வரத்து வாய்க்கால் செல்கிறது. வெள்ளியணை பகுதியில் ஆரம்பித்து, வீரராக்கியம் வரை வரத்து வாய்க்கால் செல்கிறது. இந்நிலையில், வாய்க்காலின் நீர் போக்கை தடுத்து நிறுத்தும் வகையில், அதிகளவு செடி கொடிகள் வளர்ந்துள்ளன.
இதனால், தண்ணீர் சீராக செல்ல முடிவதில்லை. தற்போது பருவழை பெய்து வருகிறது. வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வரத்து செல்ல வாய்ப்பு உள்ளது. உடனடியாக வாய்க்காலை துார்வாரி செடி கொடிகளை அகற்ற வேண்டும் என,
விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

