/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.3.80 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
/
ரூ.3.80 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
ADDED : டிச 03, 2025 07:52 AM
கரூர் : கரூர் இரும்பூதிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 3.80 லட்சம் ரூபாய்க்கு வேளாண் பொருட்கள் ஏலம் போனது.
கிருஷ்ணராயபுரம் அருகே இரும்பூதிப்பட்டியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு, வெள்ளிதோறும் கொப்பரை, மக்காச்சோளம், எள், நிலக்கடலை, பருத்தி, தேங்காய், மரவள்ளி உள்ளிட்ட விளைபொருட்கள் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி, விற்பனை செய்கின்றனர். அதில் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, கடவூர் பகுதிகளில் ஆற்று, கிணறு, மானாவாரியாக பயிரிடப்படும் பயிர்களை, சீசன் நேரங்களில் வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
கடந்த, 28ம் தேதி எள், உளுந்து, நிலக்கடலை ஆகியவைகளை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வந்தனர். அதில் வெள்ளை எள், ஒரு கிலோ அதிகபட்சமாக, 118.20, குறைந்தபட்சமாக, 91.40, சராசரியாக, 117.69 ரூபாய்க்கு ஏலம் போனது. 3,114 கிலோ வெள்ளை எள், 3 லட்சத்து, 56 ஆயிரத்து, 5 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
நிலக்கடலை, ஒரு கிலோ அதிகபட்சமாக, 66.46, குறைந்தபட்சமாக, 55.60, சராசரியாக, 60.50 ரூபாய்க்கு ஏலம் போனது. 265 கிலோ நிலக்கடலை, 17 ஆயிரத்து, 612 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. உளுந்து ஒரு கிலோ அதிகபட்சமாக, 70.11, குறைந்தபட்சமாக, 50.01, சராசரியாக, 65.10 ரூபாய்க்கு ஏலம் போனது. 105 கிலோ உளுந்து, 7,171 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இதன்படி, எள், நிலக்கடலை, உளுந்து என மொத்தம், 3 லட்சத்து, 80 ஆயிரத்து, 788 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

