/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொம்பாடிப்பட்டியில் துாய்மை பணி மும்முரம்
/
கொம்பாடிப்பட்டியில் துாய்மை பணி மும்முரம்
ADDED : டிச 03, 2025 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம் முதல் கொம்பாடிப்பட்டி வரை தார்ச்சாலை செல்கிறது. மத்திப்பட்டி, பாலப்பட்டி, மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, வரகூர் பகுதிகளுக்கு இந்த சாலை வழியாக மக்கள் செல்கின்றனர். கொம்பாடிப்பட்டி சாலை இருபுறமும் செடிகள் வளர்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, சாலை இருபுறமும் வளர்ந்த முள் செடிகளை அகற்றி சாலை துாய்மை பணி செய்யப்பட்டது. மேலும் நடப்பட்ட மரக்கன்றுகளை சுற்றி, பாதுகாப்பு பணி நடந்தது.

