/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டாக்டராக படிக்க வாய்ப்பு பெற்ற விவசாயி மகன்
/
டாக்டராக படிக்க வாய்ப்பு பெற்ற விவசாயி மகன்
ADDED : ஆக 01, 2025 01:23 AM
குளித்தலை, குளித்தலை அருகே, அரசு பள்ளியில் படித்து, நீட்தேர்வில் விவசாயி மகன் வெற்றி பெற்றுள்ளார்.
குளித்தலை
அடுத்த, திம்மம்பட்டி பஞ்சாயத்து, ரத்தின பிள்ளைபுதுார் கிராமத்தை
சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி, தாமரை தம்பதியரின் மகன்
தினேஷ்குமார். இவர், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
கடந்த, 2022ல் பிளஸ் 2 படித்தார்.
அப்போது பொதுத்தேர்வில், 472
மதிப்பெண்கள் பெற்றார். மாணவன் மருத்துவராக வேண்டும் என்ற
குறிக்கோளுடன் படித்தார். பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள்
தொடர்ந்து ஊக்கம் அளித்தனர். விடா முயற்சியால், 2022-23ம் ஆண்டு
வீட்டில் இருந்து படித்தார். பின், 2024ல், காஞ்சிபுரம் நீட் தனியார்
மையத்திலும், 2025ல் திருச்சி நீட் தனியார் மையத்திலும் படித்தார்.
தற்போது
நடந்து முடிந்த நீட் தேர்வில், 459 மதிப்பெண்கள் பெற்றார். அரசு
பள்ளியில் படித்ததால், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின்படி
மாணவனுக்கு, தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம்
கிடைத்துள்ளது.
மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு சேவை
செய்வேன் என்று மாணவன் தினேஷ்குமார் தெரிவித்தார். மருத்துவராக
படிக்க வாய்ப்பு வழங்கிய, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து,
ரத்தினபிள்ளைபுதுார் கிராமத்தின் சார்பில், டிஜிட்டல் பேனர் வைத்து
நன்றி தெரிவித்துள்ளனர்.