ADDED : செப் 22, 2026 03:34 AM
கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மானாவாரி நிலங்-களில் உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேங்கல், முனையனுார், மலைப்பட்டி, பூஞ்சோ-லைபுத்துார், காட்டூர், மாயனுார், மணவாசி, கோரக்குத்தி, பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, வயலுார், சரவணபுரம், பாப்ப-காப்பட்டி, சிவாயம் ஆகிய பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு அதிகளவு மழை பெய்தது.
கிராமங்களில் மழை பெய்ததால், விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்வதற்காக டிராக்டர் இயந்திரம் கொண்டு, உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வந்தால், உழவு செய்யப்பட்ட மானாவாரி நிலங்-களில் விதை தெளிப்பு பணிகள் துரிதமாக நடக்கும் என
விவசாயிகள் கூறினர்.
