கரூர் வட்டாரத்தில் நெல் நாற்று விடும் பணிகள் தொடங்கின
கரூர் வட்டாரத்தில் நெல் நாற்று விடும் பணிகள் தொடங்கின
ADDED : செப் 22, 2026 03:34 AM
கரூர்; கரூர் வட்டாரத்தில், நெல் நாற்று விடும் பணி-களை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்-காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்தும், சம்பா சாகுபடி பணிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, தற்போது மழை காரண-மாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி, அமராவதி ஆறு பாசன பகுதிகளில், சம்பா பருவத்தில் நெல் சாகுபடிக்-காக, நாற்று நடும் பணியில் விவசாயிகள் விறு-விறுப்பாக ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த மாதம், தழைச்சத்துக்காக நிலத்தில் அவுரி தழை பயிரிடப்பட்டுள்ளது. அவுரி தழை நன்கு வளர்ந்-ததும், அதை நிலத்தில் உழுத பிறகு, நெல் நடவு செய்யப்படும். அதற்காக, காவிரி, அமராவதி ஆற்-றுப்பகுதிகளில், வயல்களில் தனியாக இடம் ஒதுக்கி, நெல் நாற்று விடும் பணிகள் தொடங்கி-யுள்ளன.
