ADDED : டிச 26, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: சின்னதாராபுரம் அருகே, தந்தையை காணவில்லை என, போலீசில் மகள் புகார் செய்துள்ளார்.
சின்னதாராபுரம் கூடலுார் கிழக்கு, ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 74; இவர் கடந்த, 21 இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளுக்கும், சக்திவேல் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சக்திவேலு மகள் நளினி, 45, போலீசில் புகார் செய்தார். சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.