/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2024 06:38 AM
கரூர்: கரூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் பெரி-ய சாமி தலைமையில், சி.இ.ஓ., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.
அதில், தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்-டினம் அரசு பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு, தமிழக அரசு நிதியுதவி வழங்க கோரியும், மாநிலம் முழுவதும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் சங்கங்-களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜா, அமுதன், மலை கொழுந்து, வேலுமணி மற்றும், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.