sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆடி மாத வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் விழா

/

ஆடி மாத வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் விழா

ஆடி மாத வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் விழா

ஆடி மாத வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் விழா


ADDED : ஜூலை 27, 2024 12:52 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புன்னம் சத்திரம் கரியாம்பட்டியில் பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், ஆடி மாத வெள்ளி கிழமை-யையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது.அதை தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்கார த்தில், மூலவர் அங்-காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

* கரூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், வேம்பு மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண கோவில், காளியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில் மற்றும் நெரூர் சதாசிவ பிர-மேந்திரர் அதிஷ்டானம் உள்ளிட்ட, பல்வேறு கோவில்களில் பக்-தர்கள் சுவாமியை வழிபட்டனர்.தான்தோன்றிமலை காளியம்மன், பகவதி அம்மன் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அதேபோல், வெண்ணைமலை, பவித்திரம், புகழூரில் உள்ள, பாலசுப்பிரமணிய கோவில்களிலும், நன்செய் புகழூரில் உள் மேக-பாலீஸ்வரர் கோவிலிலும் இரண்டாவது ஆடி வெள்ளியை யொட்டி பக்தர்கள் நேற்று சுவாமியை வழிபட்டனர்.

* கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி வெள்ளியை முன்-னிட்டு மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகள் மற்றும் வெள்ளி கவசம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்-டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

* குளித்தலை முத்துபாலசமுத்திரம் மகா மாரியம்மன் கோவில், கடம்பனேஸ்வரர், முருகன், ஜயப்பன், நீலமேகப்பெருமாள், வரத-ராஜபெருமாள், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபு-ரீஸ்வரர், மேட்டு மருதுார் ஆரா அமுதீஸ்வரர், ஆர்.டி.மலை, விராச்சிலைஈஸ்வரர், தோகைமலை கருப்பசாமி, பெருமாள் கோவில் மற்றும் கிராம புறங்களில் உள்ள கோவில்களில் பக்-தர்கள் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளி கிழமையொட்டி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us