/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிதி நிறுவன அதிபர் கொலை உடலை கட்டி கிணற்றில் வீச்சு
/
நிதி நிறுவன அதிபர் கொலை உடலை கட்டி கிணற்றில் வீச்சு
நிதி நிறுவன அதிபர் கொலை உடலை கட்டி கிணற்றில் வீச்சு
நிதி நிறுவன அதிபர் கொலை உடலை கட்டி கிணற்றில் வீச்சு
ADDED : ஆக 11, 2025 02:42 AM
கரூர்:கரூர் நிதி நிறுவன அதிபரை கை, கால்களை கட்டி கொலை செய்து, கிணற்றில் உடலை வீசிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வாங்கல், முனையனுாரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 46. இவரது மனைவி அபிநயா, 35. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். பாலசுப்பிரமணி, கரூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் காலை நிதி நிறுவனத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இரவாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அபிநயா வாங்கல் போலீசில் நேற்று புகாரளித்தார்.
வாங்கல், குப்புச்சிப்பாளையத்தில் உள்ள விவசாய கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், பாலசுப்பிரமணி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.