/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஆய்வு
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஆய்வு
ADDED : அக் 26, 2024 06:19 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி, இரண்டா-வது நாளாக மாவட்ட கலெக்டர் நேரில் கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.
நேற்று காலை கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., வார்டுகளில், செயல்படுத்தப்படும் குப்பை சேக-ரிக்கும் பணிகள் குறித்து நேரில் சென்று கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். மேலும் கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., பகுதிகளில் நடந்து வரும் குடிநீர் திட்டப் பணிகளின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து சின்னசேங்கல் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத்-திட்டம் குறித்து ஆய்வு பணி நடந்தது. சின்ன சேங்கல் மேலைத்தொட்டம், பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.