/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்

ADDED : ஆக 17, 2025 01:49 AM
கரூர், கரூரில், சுதந்திர தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து, கரூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், சுதந்திர தினத்தன்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படுகிறதா என, கரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் கடந்த, 15ம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 55 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டதில், 40 நிறுவனங்களில் முரண்பாடு இருப்பது தெரிய வந்தது. முரண்பாடு காணப்பட்ட நிறுவனங்களுக்கு, உரிய சட்ட விதிகளின் கீழ், அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டங்களில், குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் பணியில் இல்லை என, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட, சுய உறுதி மொழி சான்றை பெற முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.