/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் அருகே மாட்டு தொழுவத்தில் தீ விபத்து
/
புகழூர் அருகே மாட்டு தொழுவத்தில் தீ விபத்து
ADDED : அக் 30, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர் அருகே, மாட்டு தொழுவத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
புகழூர் வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத், 40, விவசாயி. இவர், வீட்டின் பின் பகுதியில், மாட்டு தொழுவம் நடத்தி வருகிறார். அதில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வினோத் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று சோளத்தட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த, பகுதியில் தீ பிடித்து எரிந்தது. புகழூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். கால் நடைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

