/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே ஜவுளி நிறுவன குடோனில் தீ விபத்து
/
கரூர் அருகே ஜவுளி நிறுவன குடோனில் தீ விபத்து
ADDED : டிச 21, 2024 01:10 AM
கரூர், டிச. 21-
கரூர் அருகே, தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
கரூர் அருகே, மணல்மேடு பகுதியில் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள, அம்மன் டிரேடர்ஸ் என்ற தனியார் ஜவுளி நிறுவனத்தில் குடோன் உள்ளது. அங்கு நேற்று இரவு, 8:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிமக்கள் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு, இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ மளமளவென பரவ தொடங்கியதால், மேலும் ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு மூன்று வாகனங்களில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். நள்ளிரவு வரை தீ எரிந்து கொண்டு இருந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து கரூர் நகர போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில், குடோனில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என தெரிகிறது.
டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.