/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனுமதியின்றி பட்டாசு கடை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
அனுமதியின்றி பட்டாசு கடை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அனுமதியின்றி பட்டாசு கடை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அனுமதியின்றி பட்டாசு கடை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : அக் 27, 2024 03:55 AM
குளித்தலை: தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடை நடத்துபவர்கள், கலெக்டர் உத்தரவுப்படி தற்காலி அரசு உரிமம் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக குளித்தலை, தோகைமலை, லாலாப்பேட்டை, தரகம்பட்டி மற்றும் சுற்றுவட்-டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, மளிகை கடைகளில் விதி-மீறி பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இதனால், சிறுவர், சிறுமியர் காலவரையறையின்றி பட்டாசு வெடித்து வருகின்றனர்.
பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு, மாவட்ட நிர்வாகம் பட்டாசு சில்லறை விற்பனையாளர்களுக்கு, அரசு உரிமம் வழங்கி உள்ளது. இந்நிலையில், எந்தவித பாதுகாப்பும் இன்றி பல்வேறு இடங்களில் பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இதனால் முறையாக தற்காலிக பட்டாசு உரிமம் பெற்ற சில்லறை வியாபாரிகள், வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதியின்றி பட்டாசு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.