/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
ADDED : மார் 03, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் நடுவே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணை நீரில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
வளர்க்கப்படும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரத்தில் இருந்து மீன் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று நடந்த விற்பனையில், ஜிலேபி மீன் கிலோ, 160 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால், 650 ரூபாய், பாறை, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர் மற்றம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை வாங்கி சென்றனர். நேற்று, 350 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.