/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரம்
/
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரம்
ADDED : மே 19, 2025 01:41 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவ-ணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் தண்-ணீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இதில் வளரும் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்துக்கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் மீன் விற்பனை அதிகமாக நடக்கும். அதன்-படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால் மீன், 650 ரூபாய், ஊசி மீன், 90 ரூபாய், பாறை மீன், 140 ரூபாய் ஆகிய விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கரூர், புலியூர், சேங்கல், கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள், அதிகாலை முதலே வந்து போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.