ADDED : அக் 19, 2026 06:42 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.
இங்கு சேமிக்கும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்ற. இந்த மீன்களை உள்ளூர் மீனவர்கள், பரிசலில் சென்று பிடித்து வந்து விற்பனை செய்கின்றனர்.
புரட்டாசி
முடிந்து மறுநாளே ஞாயிறு வந்ததால், மீன் விற்பனை ஜோராக நடந்தது.
இதில் ஜிலேபி மீன் ஒரு கிலோ, 140 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 650
ரூபாய், கொக்கு மீன், 230 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
