ADDED : அக் 19, 2026 06:41 AM

கரூர்:கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பல விழாக்கள் நடக்கிறது. அதில், எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா, யானை துண்டித்த விழா மிகவும் பிரசித்தி பெற்றது. மகா அஷ்டமி நாளான, நேற்று காலை, 8:30 மணிக்கு, கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து, யானை துண்டித்த விழாவை தத்ரூபமாக செய்து காட்டினர்.
தொடர்ந்து, பூக்குடலையுடன் சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. அதில், கடவுள் வேடமிட்ட பள்ளி மாணவ, மாணவியர், கோலாட்டம் இடம் பெற்றது. மேலும், ஊர்வலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட, உற்சவர்களின் திருவீதி உலாவும் நடந்தது. முன்னதாக, நேற்று காலை, 6:00 மணிக்கு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், அனைத்து மூலவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேம், மஹா தீபாராதனை நடந்தது. விழாவில், ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
