/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மந்தம்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மந்தம்
ADDED : செப் 29, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. வளர்க்கப்படும் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்துக்கொண்டு வந்து கட்டளை கால்வாய் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
புரட்டாசி மாதம் என்பதால் மீன் விற்பனை மந்தமாக உள்ளது. இதில், ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 600 ரூபாய், பாறை, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் இல்லாததால், நேற்று 250 கிலோ வரை மட்டுமே விற்பனையானது.