/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ்ச்சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா
/
தமிழ்ச்சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா
ADDED : அக் 01, 2024 06:58 AM
குளித்தலை: குளித்தலையில், காமராஜர், ஈவெரா, அண்ணா துரை, கருணாநிதி பிறந்தநாள் மற்றும் ஆசிரியர் தினம் என ஐம்பெரும் விழா நடந்தது.
குளித்தலை தமிழ்ச் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ் சங்க செயலாளர் மாணிக்கவாசகம், துணைத் தலைவர் ரவிக்குமார் வரவேற்றனர். குளித்தலை தமிழ் பேரவை தலைவர் கடவூர் மணிமாறன், ராசிபுரம் தனியார் கல்வியியல் கல்லுாரி முதல்வர் மருதை, திருச்சி பெரியார் ஈ.வே.ரா., கல்லூரி தமிழ் துறை தலைவர் செயலாபதி, குளித்தலை தனியார் பள்ளி தாளாளர் ரம்யா ஆகியோர் பேசினர்.
ஐம்பெரும் விழாவை முன்னிட்டு, 150 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் மாமணி விருதும் மற்றும் பள்ளிகளில் வைக்கப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற, 100 பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசு வழங்கப்பட்டன.