/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி மும்முரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி மும்முரம்
ADDED : ஆக 26, 2025 01:05 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், பூக்கள் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், சேங்கல், எழுதியாம்பட்டி, செக்கணம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். ஆவணி மாதத்தில், முகூர்த்த தினங்கள் இருப்பதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.
விவசாயிகள் செடிகளில் இருந்து பூக்களை பறித்து கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது.
இதில் விரிச்சிப்பூக்கள் கிலோ, 100 ரூபாய், மல்லிகை கிலோ, 600 ரூபாய், சின்னரோஜா கிலோ, 150 ரூபாய், செவ்வந்தி பூக்கள் கிலோ, 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.