ADDED : மார் 09, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, எழுதியாம்பட்டி, காட்டூர், செக்கணம், ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் விரிச்சிப்பூக்கள், சின்னரோஜா, கோழிக்கொண்டை, செண்டுமல்லி ஆகிய ரக பூக்கள் சாகுபடி நடந்து வருகிறது. இதில் விரிச்சிப்பூக்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விலை சரிந்து கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது மாசி மாத விழா மற்றும் கோவில் விசேஷம் காரணமாக விலை உயர்ந்து. விரிச்சிப்பூக்கள் கிலோ, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கரூர், திருச்சி, முசிறி, குளித்தலை ஆகிய இடங்களில் செயல்படும் மார்க்கெட்டில் பூக்கள் விற்கப்பட்டது. மேலும் கோழிக்கொண்டை கிலோ, 30 ரூபாய், செண்டுமல்லி கிலோ, 20 ரூபாய், சின்னரோஜா கிலோ, 90 ரூபாய்க்கு
விற்கப்பட்டது.

