/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 21, 2024 06:39 AM
கரூர்: கரூர் அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நடமாடும் உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கரூர் மாநகராட்சி கோட்டை மேடு உயர்நிலைப் பள்ளி யில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்-தது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கார்த்தி தலைமை வகித்தார். நடமாடும் உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு வாகனம் மூலம் பருப்பு, டீத்துாள், மிளகாய் துாள் உள்ளிட்ட நாம் அன்-றாட பயன்படுத்தக்கூடிய பொருட்களில் என்னென்ன பொருட்-களில் எவ்வாறு கலப்படம் செய்கின்றனர். அதனை எவ்வாறு கண்டறிவது என்று மாணவ, மாணவியருக்கு செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி, பொது இடங்களிலும் மக்களி-டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என, அதிகா-ரிகள் தெரிவித்தனர்.

