ADDED : அக் 12, 2026 05:45 AM

குளித்தலை,:குளித்தலை
அடுத்த கடவூர் வட்டாரத்தில் காட்டுப்பன்றி, நரி, காட்டெருமை,
தேவாங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த விலங்குகள் அவ்வப்போது அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து
சுற்றித்திரிவது வழக்கமாக உள்ளது.
இதேபோல், தரகம்பட்டி அருகே,
கடவூர் பஞ்., பாலவிடுதி எல்லைக்குட்பட்ட களத்துப்பட்டி பகுதியில்
வசித்து வரும் பெருமாள் மனைவி அழகம்மாள் என்பவரது வீட்டின் அருகே,
நேற்று முன்தினம் காலை, 6:00 மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்துகொண்டு
வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அழகம்மாள், கடவூர்
வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து
கடவூர் வனத்துறையினர், 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக
பிடித்தனர். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் சரவணன் அறிவுறுத்தல்படி,
முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் மலைப்பாம்பை
பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
