/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
/
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 04, 2025 01:19 AM
கரூர், கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணா
நிதி பிறந்தநாளை முன்னிட்டு, 161 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சி
கள் நடந்தன. இதில், வெண்ணைமலையில் உள்ள அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில், காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தொடர்ந்து கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், மனோகரா ரவுண்டானாவில், கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
* குளித்தலை மேற்கு ஒன்றியம் சார்பில், பொய்யாமணியில், மேற்கு ஒன்றிய செயலர் தியாக
ராஜன் தலைமையில், கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேன்மொழி, மாவட்ட பொறுப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலையில் சுங்ககேட், பெரியபாலம், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில்,
எம்.எல்.ஏ.,மாணிக்கம் கொடியேற்றி வைத்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகராட்சி தலைவர் சகுந்தலா, மாநில வர்த்தக அணி துணை செயலர் பல்லவிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* குளித்தலை அடுத்த, நங்கவரம் சாத்தாயி அம்மன் கோவில் முன், நேற்று மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102ம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மலர் துாவி மரியாதை செய்தார்.
தொடர்ந்து எம்.எல்.ஏ., மாணி க்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேன்மொழி தியாகராஜன், தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்திசசிகுமார். குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மரியாதை செய்தனர். பின் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. 250க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை
செந்தில்பாலாஜி வழங்கினார்.