/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டிருந்த மாஜி நகராட்சி தலைவர் அ.தி.மு.க.,வுக்கு தாவல்

ADDED : நவ 09, 2025 03:58 AM
கரூர்: தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டிருந்த, தான்தோன்றிமலை முன்னாள் நகராட்சி தலைவர், அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தார்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பழைய நகராட்சி தலைவ-ராகவும், நகர தி.மு.க., செயலராகவும் இருந்தவர் ரவி, 60. இவர் கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், கடந்த சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட விஜயபாஸ்கர் ஆகி-யோரை எதிர்த்து, சுயேட்சையாக போட்டியிட்டு ரவி தோற்றார்.பிறகு கடந்த, நான்கரை ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ரவி, நேற்று சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செ-யலர் இ.பி.எஸ்.,ஐ சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அவ-ருடன், தான்தோன்றிமலையை சேர்ந்த தி.மு.க., முன்னாள் நிர்வா-கிகள் மகாதேவன், பாலாஜி ஆகியோரும் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அப்போது, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் உடனிருந்தார்.