/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி வாரச்சந்தையால் கடும் போக்குவரத்து நெரிசல்
/
க.பரமத்தி வாரச்சந்தையால் கடும் போக்குவரத்து நெரிசல்
க.பரமத்தி வாரச்சந்தையால் கடும் போக்குவரத்து நெரிசல்
க.பரமத்தி வாரச்சந்தையால் கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 09, 2025 03:58 AM
கரூர்: க.பரமத்தியில் வாரச்சந்தை கூடும் நாளில், சாலையோரத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் சரக்கு வாகனங்-களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர்-கோவை சாலையில், க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரே செவ்வாய்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிறு, குறு வியாபாரிகள் விற்-பனை செய்து வருகின்றனர். இதில், பலர் வாரச்சந்தை நுழைவா-யிலில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சிறு, சிறு கடை-களை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். தேசிய நெடுஞ்-சாலையில் செல்லும் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாக-னங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் அடிக்கடி வாய்தகராறு ஏற்படுகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் போக்குரத்திற்கு இடையூறாக சரக்கு வாகனங்களை நிறுத்தி செல்-கின்றனர். வாரச்சந்தையால் வாகன போக்குவரத்திற்கு இடையூ-றாக இருக்கும் சாலையோர கடைகள், சரக்கு வாகனங்களை நிறுத்-துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

