/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குட ஊர்வலம்

ADDED : ஜூலை 27, 2025 01:10 AM
குளித்தலை :குளித்தலை, பெரியபாலம் சண்முகா நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, நேற்று காலை பக்தர்கள், கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடம் ஏந்தியும், பலர் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர், அம்மனுக்கு பால்குடம் நீரை ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, அன்னதானம் வழங்கினர். மாலையில் மாவிளக்கு ஊர்வலம், அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இன்று காலை மதுரை வீரன் சுவாமிக்கு கிடா வெட்டுதல், மாலையில் அருள் வாக்கு சொல்லுதல், இரவு மஞ்சள் நீராட்டு விழா, தொடர்ந்து கரகம் மற்றும் முளைப்பாரி ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று நடந்த பால்குடம், தீர்த்தக்குடம் நிகழ்ச்சியில் நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.