/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
கிருஷ்ணராயபுரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
கிருஷ்ணராயபுரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஜன 04, 2025 01:17 AM
கிருஷ்ணராயபுரம், ஜன. 4-
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குளித்தலை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து கருப்பத்துார் சாலை முதல் கள்ளப்பள்ளி காலனி வரை தடுப்புச்சுவருடன் கூடிய, தார் சாலை அமைக்கும் பணிக்கு 19.20 லட்சம் ரூபாய், பிள்ளபாளையம், பாலப்பட்டி சாலை முதல் கள்ளப்பள்ளி காலனி வரை தடுப்புச்சுவருடன் கூடிய தார் சாலை அமைக்க, 18 லட்சம் ரூபாய், குளித்தலை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பல்வேறு பணிகளை, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன், கள்ளப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மூலம், 23.94 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தார். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் குறள்செல்வி, கருப்பத்துார் பஞ்சாயத்து தலைவர் ரெங்கம்மாள் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.