/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : செப் 05, 2025 01:30 AM
கரூர், புகழூர் நகராட்சியில் பணியாற்றும், துாய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் துாய்மை பணியாளர்களுக்கு கண்ணில் புரை, மாறு கண், நீர் அழுத்த நோய், கிட்ட பார்வை, துாரப்பார்வை, பார்வை குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
கண் பரிசோதனையின் போது, அறுவை சிகிச்சை செய்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் கண்பார்வை குறைந்தவர்களுக்கு உரிய கண் மருந்து வழங்கப்பட்டது. முகாமில், புகழூர் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் உள்பட பலர் பங்கேற்றனர்.