ADDED : செப் 28, 2026 06:32 AM
அ நிறம் | அளவு
கரூர்:சாய்ராம் சாரிடபிள் டிரஸ்ட், லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் சார்பில், இலவச மருத்துவ முகாம், கரூர் நகரத்தார் திருமண மண்டபத்தில் நடந்தது. மருத்துவ முகாமை, ஆடிட்டர் அருண்பிரசாத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து,
250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, மருத்துவ பரிசோதனை
செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், 32
கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில்,
சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர்
மெய்யப்பன், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், வட்டார
தலைவர் திலகவதி
உள்பட பலர் பங்கேற்றனர்.
